இந்தியா

"காங்கிரஸிற்கு இதைப் பற்றிப் பேச உரிமை இல்லை" - அமித்ஷா ஆவேசம்

தந்தி டிவி

மசோதா மீதான விவாதத்திற்கு பதில் உரை வழங்கி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி சட்ட திருத்தம் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான் என்றார். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை என்றும், எமர்ஜென்சியை கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியை தாஜா செய்வதற்காகவே டெல்லி மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது என கூறினார். இன்னும் நான்கு ஐந்து கட்சிகளை சேர்த்துக் கொண்டாலும் 2024 தேர்தலில் பிரதமர் மோடிமீண்டும் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் எனக் குறிப்பிட்டார்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்