கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என்றும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.