இந்தியா

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளார், அதனை பெற நாம் தயாராக வேண்டும்

தந்தி டிவி

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும், அதனை பெறுவதற்கு நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை, பெங்களூரு இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் உதய் விரைவு ரயில் சேவையை ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் ராஜன் கோகைன், மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை புதுப்பாளையம், வீரப்பாண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளதாகவும், அதனை பெற நாம் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்