இந்தியா

நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு விற்பனை - ஜூன் 11 ஆம் தேதி ஏலம் என தகவல்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 11 ஆம் தேதி வர்த்தக பயன்பாட்டுக்கான நிலக்கரி சுரங்க ஏலம் நடைபெறும் என அறிவித்துள்ளது. சுமார் 50 சுரங்கங்கள் வரை தனியாருக்கு ஏலம் விடப்பட உள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விற்பனைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்