இந்தியா

CJP Protest | "வரும் செவ்வாய்க்குள்" - CJP அறிவிப்பு

CJP Protest | "வரும் செவ்வாய்க்குள்" - CJP அறிவிப்பு

thanthitv

"வரும் செவ்வாய்க்குள்" - CJP அறிவிப்பு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் போராட்டக் குழுவினர் முன்வைத்த அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தங்களது மற்ற கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை "நம்பிக்கையின் அடிப்படையில்" வாபஸ் பெறுவதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் சிஜேபி நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு அதிகப்பட்ச நஷ்டஈடு வழங்குவது மற்றும் கல்வி மற்றும் தேர்வுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சிஜேபி அளித்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் ஜெ.பி‌.நட்டா தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ திரும்ப பெற அரசு உறுதியளித்திருப்பதாகவும், நான்கு வாரங்களுக்கு பிறகு அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வரும் செவ்வாய் கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்திரவாதங்களை அரசு அளிக்கும் என்று நம்புவதாகவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாதகமான முடிவைத் தொடர்ந்து, 37 நாட்களாக நடைபெற்று வந்த தங்களின் தொடர் போராட்டத்தைக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வாபஸ் பெற்றுள்ளது.

Tiruvannamalai | டிரோன் மூலம் தேடுதல் வேட்டை - 7 பெண்கள் உட்பட.. தி.மலையில் போலீசார் அதிரடி

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."