தெற்கு டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெறும் கல்லெறித் தாக்குதல் சம்பவங்களில் தீயணைப்புத் துறை 2 வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் வெடித்த வன்முறை சம்பவத்திற்கு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தொடர்பில்லை என பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் காரணமாக தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் உள்ள சுக்தேவ் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.