குடியுரிமைக்கான ஆதாரத்தை அரசு கேட்பதால் அதை வேண்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் சுடுகாட்டில் உள்ள தனது முன்னோர்களிடம் சமாதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹசீப் அஹமது பிரார்த்தனை செய்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், போராட்டம் நடந்து வரும் நிலையில், சுடுகாட்டில், காங்கிரஸ் நிர்வாகி இந்த வழிபாடை மேற்கொண்டார்.