சீனாவின் வூஹானில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் பரவி வருதால், மக்கள் மத்தியில், பீதி நிலவுகிறது. இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்டு வர, நேற்று பிற்பகல், ஏர் இந்தியா விமானம் சீனா புறப்பட்டது. அங்கிருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட 324 இந்தியர்களுக்கு விமானத்தில் ஏறும் முன்பு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், இன்று காலை ஏழரை மணியளவில், விமானம் தரையிறங்கியதும், 324 பேரும், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு, மானேசர் துணை ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 53 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.