ம.பி.யை தொடர்ந்து குஜராத்திலும் நீர்மாசு காரணமாக பலர் பாதிப்பு
மத்திய பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் நீர் மாசு காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான நீர் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் குஜராத்தின் காந்தி நகர், ஆதிவடா பகுதியில் அசுத்தமான தண்ணீர் காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.