இந்தியா

கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால், 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் பேருந்து நிலையத்தில், ஜெனகாமா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஏழு மாத பெண் குழந்தையை விற்பதாக கூறி, கூவி கூவி குழந்தையை விற்றார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலை அடுத்து, போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தையை விற்கவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்