இந்தியா

டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்- கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அரசு தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லி மாநில தலைமைச்செயலாளர் அனுஷ் பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் கூட்டம் நடைபெற்ற போது ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இருவர் தம்மை தாக்கியதாக அனுஷ் பிரகாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 11 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்