இந்தியா

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - காணாமல் போன 16 மீனவர்களை உடனடியாக மீட்க கோரிக்கை

காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - காணாமல் போன 16 மீனவர்களை உடனடியாக மீட்க கோரிக்கை

காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 மீனவர்களும் பயணித்த படகு குறித்து தற்போது வரை எந்த தகவலும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த மே 5 ஆம் தேதி கேரள துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட படகுடனான இணைப்பு டவ்-தே புயலுக்கு பிறகு துண்டிக்கப்பட்ட நிலையில், இது குறித்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை காணாமல் போன மீனவர்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினரிடையே அச்சம் நிலவுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலையிட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்