இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.

தந்தி டிவி

குடியரசு தலைவர் மாளிகையில் தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழா நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவிகாலம் அடுத்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை