ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என பதவி ஏற்ற முதல் நாளில் தலைமை நீதிபதி போப்டே அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், நாளை அல்லது நாளை மறுநாள் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், 90 நாட்களுக்கு மேலாக திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.