இந்தியா

செஸ் போர்டில் விஷம்... எதிராளியை வீழ்த்த கொடூர சதி... பேயாக மாறிய பெண்... வெளியான பகீர் காட்சி

தந்தி டிவி

செஸ் போர்டில் விஷம் தடவி செஸ் வீராங்கனையைக் கொல்லப் பார்த்த சக வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ளார்...என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

விளையாட்டை விளையாட்டாய் எடுக்காமல் விபரீதமாக யோசித்ததால் வந்த வினை...கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த வீராங்கனை...

செஸ் போர்டில் மர்ம பொருள் எதையோ தடவுகிறாரே...இவர் தான் ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயது அமினா அபகரோவா...

இவர் கொல்லப் பார்த்தது தன் குழந்தைப்பருவ எதிரி உமைகனத் ஒஸ்மானோவாவைத் தான்...

சிறுவயதில் ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிக்குப்பழி வாங்க பாதரசத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார் அமினா அபகரோவா...

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள மகச்சலா நகரில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்த நிலையில்...அறைக்குள் நுழைந்து...தன் கைப்பையில் இருந்து பாதரசத்தை எடுத்து உமைகனத் அமரும் பக்கம் தடவியுள்ளார்...

போட்டியில் அமர்ந்த உமைகனத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

சிசிடிவி கேமரா அமினாவை அம்பலப்படுத்தியது...

போலீசிடம் வசமாக சிக்கிய அமினா அபகரோவா மீதான குற்றம் நிரூபணமானால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் வாழ்நாள் முழுவதும் செஸ் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட வாய்ப்புண்டு...

விளையாட்டை சீரியசாக எடுத்ததால் கம்பி எண்ணக் காத்திருக்கும் அமினாவை இணையவாசிகள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு