Firecrackers | பட்டாசு கடை திறப்பு விழாவில் பரபரப்பு - திடீரென வெடித்து சிதறிய..
#pondycherry #blast #Firecrackers
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பாப்ஸ்கோ வளாகத்தில், தீபாவளி பட்டாசு சிறப்பு அங்காடியின் திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்றபோது போக்கஸ் லைட் திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான கான்பெட் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த அங்காடியை முதலமைச்சர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட் வெடித்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து ஏற்பட்ட தீயை ஊழியர்களே அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.