இந்தியா

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
இஸ்ரோவில் இருந்து விண்ணிற்கு புறப்பட்ட16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.நிலவை நோக்கிய தன் பயணத்தை தொடங்கிய சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது.அதன்படி புவிவட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.30 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.நிலவின் வட்டப்பாதையில் செவ்வாய் கிழமை 9.02ல் இருந்து 9.31 மணிக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 2, நிலவை சுற்றி வருவதால் இஸ்ரோவின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தற்போது சந்திரயான் 2 ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வை எட்ட உள்ளதாக கூறினார்.விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2 ம் தேதி பிரியும் என்றும் அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் அதிகாலை 1.55 மணிக்கு தரையிறங்கும் என கூறிய சிவன், அன்றைய தினம் நினைத்த இலக்கை அடைவோம் என்றும் இதனால் இந்தியாவின் விண்வெளி சாதனை நிச்சயம் உலக அளவில் பேசப்படும் என்றும் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி