இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2...

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம் பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

கடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் - 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

"வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம்"

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.எதிர்ப்பார்த்ததை விட 6000கி.மீ. வேகமாக அடைந்தது. இதனால் எரிபொருள் கூடுதலாக கிடைத்துள்ளது. இது வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம் ஆகும். இதன் மூலம் அறிவியல்/ஆய்வுகள் மேலும் விரிவடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திராயன் 2 விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும்,இது வரலாற்று பயணத்தின் துவக்கம் என பெருமிதத்துடன் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்