இந்தியா

விக்ரம் லேண்டர் ஆயுள்காலம் இன்றுடன் முடிவு

நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் இன்றுடன் முடிகிறது.

தந்தி டிவி

நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், இன்றுடன் முடிகிறது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நிலவில் தரை இறங்கும் போது 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இதில் அமெரிக்காவின் நாசாவும் களம் இறங்கியது. ஆனாலும் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இன்று முதல்,14 புவி இரவுகள், நிலவின் தென் பகுதியில் துவங்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலவை சுற்றி பயணித்து, ஆர்ப்பிட்டரின் தனது ஆய்வை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்