மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான, நாடுமுழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.