சங்கிலி பறித்துத் தப்ப முயன்ற திருடனை விரட்டிப் பிடித்த பெண் கேரளாவில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருடனை, பெண் ஒருவர் விடாமல் விரட்டிச் சென்று பிடித்துப் போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆலப்புழா மாவட்டம் கிருஷ்ணபுரத்தில், கட்டிட வரைபடம் கேட்பது போல் நடித்துப் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வண்டியில் தப்ப முயன்ற திருடனை, சற்றும் அஞ்சாத ரஞ்சினி என்ற அந்தப் பெண் துரத்திச் சென்று வாகனத்தைக் கீழே தள்ளிய நிலையில், காயங்குளம் போலீசார் திருடனைக் கைது செய்து நகையை மீட்டனர்.