இந்தியா

செயின் கொள்ளையனாக மாறிய போலீஸ் -திருட்டு பைக்கால் வசமாக சிக்கினார் - தாய், மகளுக்கு நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு அருகே செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கலிவரதன். இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக இருக்கும் போது, மர்மநபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்ற தாயையும், மகளையும் கொள்ளையர் சுத்தியலால் தாக்கிய நிலையில், இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனே, பதற்றத்தில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தை விட்டு அவர் தப்பி சென்ற நிலையில், வாகனத்தின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பைக் முத்தியால்பேட்டையை சேர்ந்தவருடையது என்பதும், அவரிடமிருந்து பைக் திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதன்பின் நடத்திய விசாரணையில், புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஐ.ஆர்.பின்.என் காவலரான ராஜா என்பவர்தான் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது என்பதும் தெரியவந்தது. கடந்த 2005-ல் செயின் பறிப்பில் ஈடுபட்டு காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி