இந்தியா

அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மைய பிரச்னையான பூஜ்யம் புள்ளி 3 ஏக்கர் நிலத்தை தவிர அதைச்சுற்றி உள்ள 67 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு இன்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்