கொரோனா அதிகரித்து வரும், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு, மத்திய குழுவை சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது.
நாட்டில் 2-வது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து வந்தாலும், கடந்த சில நாட்களாக கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், அருணாச்சல் பிரதேஷ், மணிப்பூர், திரிபுரா, உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ள மத்திய குழுவை சுகாதார அமைச்சகம் 6 மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது.
இரண்டு பேரைக் கொண்ட இந்த உயர்மட்டக் குழுவில், ஒரு பொது சுகாதார நிபுணர் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் இடம் பெறுவர்.
இந்த குழு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் இருப்பு, ஆம்புலன்ஸ்,வெண்டிலேட்டகள், மருத்துவ ஆக்சிஜன், மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்காணிப்பதோடு, துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.