இந்தியா

உன்னாவ் விவகாரம்: விரைவில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை தாக்கல் என தகவல்

உன்னாவ் விவகாரத்தில் சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய அந்த சிறுமியின் தந்தை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கார் விபத்தில் சிறுமியின் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞர் படுகாயமடைந்தார். குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தது. சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்