ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து ஓய்விபெற்ற பாதுகாப்பு படை மற்றும் பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ராதாகுமார், ஹிந்தல் ஹைதர் தயப்ஜி, கபில் கக், அசோக் குமார் மேத்தா, அமிதாவா பாண்டே, கோபால் பிள்ளை, ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களைத் தவிர, புகழ்பெற்ற காஷ்மீரி நாடகக் கலைஞர் இந்தர் சலீம், பத்திரிகையாளர் சதீஷ் ஜேக்கப் ஆகிய இருவரும் இணைந்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.