இந்தியா

கார் விபத்தில் உயிர் காக்கும் ஏர் பேக்காலேயே குழந்தை மரணம்

தந்தி டிவி

கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள படப்பரப்பு பகுதியில், காரும் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்த பெண்ணின் மடியில், அவரது 2 வயது குழந்தை அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏர் பேக் விரிந்து குழந்தையின் முகத்தில் அழுத்தியதாலும், சீட்பெல்ட் இறுக்கியதாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதியினர் காரில் இருந்து மீட்ட நிலையில், குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.

CM Vijay| தீபத்தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் சென்ற அரசுக்கு எதிர்பாரா சிக்கல்

DRI | Drugs | ஒரே மாதத்தில் ரூ.258 கோடி.. அதிரடியாக இறங்கி தூக்கிய DRI

Gold Smugging | Pudukottai | இத்தனை கிலோ தங்கமா.? மடக்கி பிடித்து அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷன்

CM Vijay| நாடே எதிர்நோக்கும் `தீபத்தூண்’ - உச்ச புள்ளியை சந்தித்த CM.. எடுக்கும் முக்கிய முடிவு

Thiruparankundram மலை உச்சி தூணுக்கு வந்த அதிகாரிகள் - து*ப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு