இந்தியா

Car Accident | கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி அப்பளமாய் நசுங்கிய கார் - பதறவைக்கும் காட்சி

கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி அப்பளமாய் நசுங்கிய கார் - பதறவைக்கும் காட்சி

thanthitv

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே மழையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பை தாண்டி சாலையின் எதிர் திசையில் வந்த லாரி மீது நேருக்குநேர் மோதி விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது... நெடுஞ்சாலையில் வழுக்கிச்சென்ற கார் - எதிர் திசையில் வந்த லாரியில் மோதி விபத்து - பதறவைக்கும் காட்சிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த 3 பக்தர்கள், பூரி ஜெகந்நாதர் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்னோவா காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த பலத்த மழையால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் வழுக்கிச்சென்று, நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி, எதிர் திசையில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அச்சுதானந்தா மற்றும் முகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையினால் சாலை வழுக்கியதே இந்த கோர விபத்துக்குக் காரணம் எனத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு