Bus Accident | நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. உள்ளே சிக்கி துடித்த 40 பேர் - பதற வைக்கும் CCTV
#kerala #accident #busaccident #thanthitv
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை அருகே நெல்லிக்குன்னம் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர்கள் உட்பட காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.