இந்தியா

மத்திய பட்ஜெட்டில் வரவு செலவுகள் : நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு

நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு

தந்தி டிவி

இந்தியாவின் நடப்பு நிதியாண்டு மொத்த வரவு செலவு அறிக்கையில் வருவாய் வருமானம் 19 லட்சத்து 77 ஆயிரத்து 693 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018 நிதியாண்டில் 17 கோடியே 29 லட்சத்து 682 கோடி ரூபாயாக இருந்தது.

கடன்கள் மூலமான வருமானம் உள்பட மூலதன வருமானம் 8 கோடியே 6 லட்சத்து 507 கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்த ஆண்டில் 7 கோடியே 27 லட்சத்து 553 கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த வருமானம் 27 கோடியே 84 லட்சத்து 200 கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்த நிதியாண்டில் 24 கோடியே 57 லட்சத்து 235 கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த செலவுகள் , மொத்த வருமானத்துடன் ஈடு செய்யப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் 27 கோடியே 84 லட்சத்து 200 கோடி ரூபாயாக செலவுகள் இருக்கும்.

வட்டியாக 6 லட்சத்து 65 ஆயிரத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 570 கோடி ரூபாயாக இருந்தது.

நிதிப் பற்றாக்குறை 7 லட்சத்து 3 ஆயிரத்து 999 கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்த நிதி ஆண்டில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 398 கோடி ரூபாயாக இருந்தது.

வருவாய் பற்றாகுறை 4 லட்சத்து 70 ஆயிரத்து 214 கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 930 கோடி ரூபாயாக இருந்தது.

முதன்மை பற்றாக்குறையாக 38 ஆயிரத்து 938 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 46 ஆயிரத்து 828 கோடி ரூபாயாக இருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்