திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள மாரியப்பன் என்பவரின் வீட்டில் அரியவகை மலரான பிரம்ம கமல மலர் பூத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இரவு நேரத்தில் பூக்கும் இந்த மலரானது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே வாடிவிடும் தன்மை கொண்டது.பழனியில் கடந்த 2008ஆம் ஆண்டு பூத்த பிரம்ம கமல மலர் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பூத்துள்ளது குறிப்பிடத்தக்கது.