இந்தியா

Non-veg சாப்பிடக்கூடாது என நச்சரித்த காதலன்..மும்பையில் பெண் விமானி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான், இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த பெண் விமானி சிருஷ்டி துலி என்பவர் இங்குள்ள குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்திருக்கிறார்.

27 வயதே ஆன.. சிருஷ்டி துலி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பைலட்டாக பணி செய்து வந்திருக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போவாய் காவல் நிலைய போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன...

டெல்லியில் விமானியாக பயிற்சி பெற்றபோது, சிருஷ்டிக்கு.. ஆதித்யா பண்டிட் என்பவர் நண்பராக அறிமுகம் ஆன நிலையில், இவர்களது நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்திருக்கிறது. இந்த சூழலில் தான், பெண் விமானி சிருஷ்டி, தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு காரணம், சிருஷ்டியின் காதலனான ஆதித்யா பண்டிட் தானாம். காரணம் தன் காதலியான சிருஷ்டியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கூறி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், போலீசாரிடத்தில் பெண் விமானியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், பயிற்சி காலத்தில், சிருஷ்டி டெல்லியில் உள்ள துவாரகாவில் வசித்து வந்ததும், பயிற்சிக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை கிடைத்து 2023-ல் மும்பைக்கு குடிபெயர்ந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, பெண் விமானி சிருஷ்டியை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது காதலன் ஆதித்யா பண்டிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக, விசாரித்த நீதிமன்றம் அவரை 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், அசைவ உணவு சாப்பிடவிடாமல் தடுத்ததால், இந்த விபரீதம் ஏற்பட்டதா? அல்லது இளம்பெண்ணின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்