இந்தியா

Fly Dubai Incident| ``மூளையை அழுத்தும் எலும்பு.. பார்வை குறைபாடு’’ - பைலட் மச்சாருக்கு சோதனை

``மூளையை அழுத்தும் எலும்பு.. பார்வை குறைபாடு’’ - பைலட் மச்சாருக்கு சோதனை

thanthitv

`மூளையை அழுத்தும் எலும்பு.. பார்வை குறைபாடு’’ - 174 உயிர்களை காத்த பைலட்டுக்கு இப்படியொரு சோதனையா

#smithmachchhar #flydubaiincident

விமானத்தை கடத்த முயன்ற ஓமன் நாட்டு துணை விமானியை தடுத்து நிறுத்திய இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Smit Machchar) மண்டை ஓடு உடைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஃப்ளைதுபாய் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் நாட்டு துணை விமானியை தடுத்து நிறுத்திய இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Smit Machchar) தலையில் ஏற்பட்டு இருப்பது ஒரு தீவிரமான காயம், ஏனெனில் எலும்பு மூளையை அழுத்தவோ அல்லது அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ கூடும் என்பதால், பெரும்பாலும் மருத்துவச் சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கேப்டன் ஸ்மித்திற்கு அபுதாபியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது தலைவலி பாதிப்பு, பார்வைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பக்க விளைவுகளை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். கேப்டன் ஸ்மித்தின் கை, கால்கள், மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதி உள்ளிட்ட இடங்களில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் நன்கு குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNPSC | Group 4 Exam | ஆயிரக்கணக்கில் அரசு வேலை.. வெளியானது குரூப் 4 அறிவிப்பு

BREAKING || ராகுல், பிரியங்கா காந்தி கைது - டெல்லியில் பெரும் பரபரப்பு

Veeramani | Case | GEM வீரமணி வழக்கில் காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை

Puducherry | புதுச்சேரி இடைத்தேர்தல் இறுதி கட்டத்தில் அதிகரித்த வாக்குப்பதிவு

Chennai | PM Modi | CM Vijay | சென்னை வரும் PM மோடி ஒரே ரயிலில் பிரதமருடன் பயணம் செய்யும் CM விஜய்?