இந்தியா

பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றினார்களா? ஏமாற்றப்பட்டார்களா?விஸ்வரூபமெடுக்கும் பொம்மன் -பெள்ளி விவகாரம்

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவண பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ், தங்களை மிரட்டுவதாக பொம்மன் - பெள்ளி தம்பதி குற்றம் சாட்டியுள்ளனர்.

2 யானை குட்டிகளை எப்படி பராமரித்தார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'தி எலிபண்ட் விஸ்பர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை பெற்றது. இதில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் என அனைவரும் நேரில் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ்க்கு ஏராளமாக நிதி வந்த நிலையில், படத்தில் நடித்தவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. ஆனால், உதவிகளை செய்து, வாகனம் வாங்கித் தந்த‌தாக பொய்யான தகவல்களை பரப்புவதாக பொம்மன் - பெள்ளி தம்பதியர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தங்களை இயக்குநர் கார்த்திகி மிரட்டுவதாகவும் மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்