அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 75 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றனர். பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளே தேவை எனும் நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் 47 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.