இந்தியா

பீகாரில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : காரணம் என்ன?

பீகாரில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி தணிக்கை செய்யப்பட்ட பின், மொத்த எண்ணிக்கையின் அளவு 72 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

தந்தி டிவி

பீகாரில் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்ததால், பாட்னா உயர் நீதிமன்றம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் எண்ணிக்கையை தணிக்கை செய்ய உத்தரவிட்டிருந்தது. கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2020ல் 1,600 என்றும், 2021 ஏப்ரல், மே மாதங்களில் 3,900 என்றும், இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,500 என்றும் பீகார் அரசு முன்பு கூறியிருந்தது. உயர் நீதிமன்ற ஆணைப்படி, மறு தணிக்கை செய்யப்பட்ட பின், 2021 ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,775 என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் படி பீகாரில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,429ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பதிவான மொத்த மரணங்களை விட இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

* கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பீகார் தலைநகரான பாட்னா நகரில் அதிகபட்சமாக 2,303 கொரோனா மரணங்க்ள் ஏற்பட்டுள்ளதாக புதிய தரவுகள் கூறுகின்றன.ஆனால் பாட்னா நகரில் உள்ள மூன்று அரசு தகன மையங்ளில் 2021 ஏப்ரல், மே மாதங்களில் 3,243 கொரோனா தகனங்கள் நடந்தாக ஆவணங்கள் கூறுவது, புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி