இந்தியா

பீகார் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், திகாவில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தந்தி டிவி

பீகார் தேர்தல் - தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி வாக்களித்தனர்

ராஷ்டிரிய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் 160ஆவது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, மக்கள் ஜனநாயக கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், இந்த முறை வாக்காளர்கள் பீகாரில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். பீகாரில் மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான தேவை இருப்பதாக ராப்ரி தேவி தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி வாக்களிப்பு

பீகார் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி ராஜேந்திர நகர் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். மக்கள் வீட்டை விட்டு வெளியேறி கொரோனா முன்னெச்சரிக்கை உடன், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என சுசில் குமார் வேண்டுகோள் விடுத்தார்

வாக்காளர்களுக்கு தேஜ் பிரதாப் யாதவ் வேண்டுகோள்

ஹசன்பூர் தொகுதியில் போட்டியிடும், லாலு பிரசாத் யாதவ்வின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார். வாக்காளர்கள் தங்கள் கடமையை விரைந்து நிறைவேற்ற அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பீகார் ஆளுநர் வாக்களித்தார்

பீகார் மாநில ஆளுநர் பாகு சவுதான், திகாவில் உள்ள அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பெருமளவில் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்றும் கடந்த முறையை விட இந்த முறை, வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு