பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கன்னையாகுமாரின் கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். சி.ஏ.ஏ, என்.ஆர்.பி., என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக, அவர் பிரசாரம் மேற்கொண்டு வருவதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.