இந்தியா

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை - வீரப்ப மொய்லி

காங்கிரசில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்வது ராகுல்காந்திக்கு அழகல்ல என்றும் பேட்டியொன்றில் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ராகுல்காந்திக்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச்செய்ய ராகுல்காந்தி உடனடியாக ஆயத்தமாக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் மாநில பொறுப்பாளர்களாக சரியான நபர்களை ராகுல்காந்தி நியமிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து கட்சிக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும் என்றும் வீரப்பமொய்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்