இந்தியா

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள போட்டராஜ் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அணில் என்பவர்,தனது குழந்தை மற்றும் உறவினர்களின் 2 குழந்தைகளை தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் 4 பேரும் தூக்கி எறியப்பட்டனர்.இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் அணில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.படுகாயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தையும் உயிரிழந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்