நீலகிரியின் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோத்தகிரி கட்டபெட்டு சாலையில் கரடி உலா வருவதை வாகன ஒட்டிகள் பார்த்தனர். அந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.