கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வங்கி சேவை நேரத்தை குறைப்பதாக தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.
* ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை பார்க்க நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், வங்கி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை தனியார் வங்கிகள் குறைத்துள்ளன.
* இது தொடர்பாக, கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, சிட்டி யூனியன் வங்கி, பெடரல் வங்கி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பியுள்ளன.
* வரும் 31 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வங்கிப் பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* காசோலை மாற்றுவது, பாஸ்புக் அப்டேட் செய்வது, வெளிநாட்டு பணத்தை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும்.
* வங்கி ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், மக்கள் மின்னனு சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.