இந்தியா

பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் - சுஷாந்த் சிங்கின் காதலியிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்

பெங்களூருவில் மாத்திரை வடிவில் ஹைடெக்காக போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட விஐபிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். போதைப் பொருள் பயன்படுத்தும் ரியாவுக்கு அந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது , உறுதியானதால் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது.


போதைப் பொருட்களை கடத்துவதில் கை தேர்ந்த அந்த கும்பல் பெங்களூருவில் கிலோ கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக டெல்லியில் நடந்த விசாரணையில் தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பெங்களூரு போலீசாருக்கு தெரிவிக்கவே, அவர்களும் களத்தில் இறங்கினர்.

அவர்களது தகவலின் பேரில் விசாரணை நடத்திய போது பெங்களூருவின் மையப்பகுதியான கம்மனஹள்ளியில் இந்த கும்பல் இயங்கி வந்தது தெரியவந்தது. அனிகா என்ற பெண் தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார்.

போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சாவை மாத்திரை வடிவில் மாற்றி அதை பல்வேறு பகுதிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்தது. அனிகா, ரிஜேஷ் ரவீந்திரா, அனூப் ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கம்மனஹள்ளி என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை செய்த போது விதவிதமான மாத்திரை வடிவங்களில் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. கிட்டத்தட்ட 200 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே இந்த அளவு போதைப் பொருள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. டேங்கர் லாரிகள் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து அதை பெங்களூருவில் வைத்து சப்ளை செய்து வந்ததும் உறுதியானது. இந்த கடத்தல் கும்பலின் செல்போன்களை ஆய்வு செய்ததில் தென்னிந்திய திரைப் பிரபலங்கள், விஐபிகள், கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பு இருந்தது உறுதியானது. அதிலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று விற்பனை செய்து வந்திருக்கிறது இந்த கும்பல்...

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் போதைப் பொருள் வழக்கில் பல்வேறு அதிரடி தகவல்களும், கைது நடவடிக்கைகளும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்