இந்தியா

அத்தை மீது தீராத காதல்.. அடிக்கடி தகாத உறவு.. பணத்திற்காக அத்தையை எரித்த கொடூரன்

தந்தி டிவி

பெங்களூரு புறநகர் தொட்டகம்மனஹள்ளியை சேர்ந்த சுகன்யா என்பவர், கடந்த வாரம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, பன்னரகட்டா பகுதியில் எறிந்த நிலையில் மனித எலும்பு கூடுகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், எலும்பு கூடுகளை மீட்டு விசாரித்தபோது, அது காணாமல் போன சுகன்யாவின் உடல் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சுகன்யா கணவரின் சகோதரி மகன் யஷ்வந்த் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. யஷ்வந்த்திற்கும், அவரது அத்தைக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும், சுகன்யாவிடம் இருந்து யஷ்வந்த் அடிக்கடி பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் சுகன்யா பணம் தர மறுத்தததால், ஆத்திரமடைந்த யஷ்வந்த், தனது அத்தையை கடந்த 14-ந் தேதி காரில் வெளியே அழைத்துச் சென்று, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணயில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யஷ்வந்த்தை போலீசார் கைது செய்தனர்.

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்