இந்தியா

லஞ்ச வழக்கு விசாரணை - ஐஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூருவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

பெங்களூர் நகர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் விஜய்சங்கர். இவர் ஐ.எம்.ஏ நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்தபோது, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். அண்மையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ துரிதப்படுத்திய நிலையில் நேற்றிரவு விஜய் சங்கர் தனது பெங்களூரு இல்லத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது கர்நாடக அரசின் சகாலா திட்டத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த விஜய் சங்கர் நேற்றுகூட வழக்கம் போல பணிக்கு வந்திருந்தார். பிற்பகல் வீட்டிற்குச் சென்ற அவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்