இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட மாநாடு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது.

இதில், நாடு முழுவதிலும் இருந்த நூற்றுக்கணக்கான சாதுக்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர். அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராம ஜென்மபூமி நிலத்தை பிரிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த மாநாட்டை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்