இந்தியா

அயோத்தி வழக்கு : 18 சீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி இருந்தது. சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என அறிவித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து, உத்தரவு பிறப்பித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்