Delhi | Gas Cylinder | கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை பதுக்கி விற்க முயற்சி.. டெலிவரி ஏஜென்ட்கள் கைது #delhi #gascylinder #police #gascylindercrisis #thanthitv மேற்காசியப் போரால் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், டெல்லியில் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கமம் விஹார் பகுதியில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், 'இன்டேன்' நிறுவனத்தின் 184 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் தொடர்புடைய இன்டேன் கேஸ் நிறுவனத்தின் டெலிவரி ஏஜென்ட்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிக லாபத்திற்காகச் சிலிண்டர்களைப் பதுக்கி மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.