இந்தியா

"24 மணி நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார் கெஜ்ரிவால்" - மணீஷ் சிசோடியா | Arvind Kejriwal

தந்தி டிவி

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா, உண்மையும், நேர்மையும் வென்றிருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையிலிருந்து வெளியே வந்த சிசோடியா, டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம் ஆத்மி அலுவலகம் சென்று கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது, தொண்டர்களின் உண்மையான கண்ணீர் மன வலிமையை தந்ததாக மணீஷ் சிசோடியா குறிப்பிட்டார். ஏழு, எட்டு மாதங்களில் தமக்கு நீதி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த வேளையில், நீதி கிடைக்க 17 மாதங்கள் ஆகியிருப்பதாகவும், இறுதியில் உண்மையும் நேர்மையும் வென்றிருப்பதாகவும் சிசோடியா குறிப்பிட்டார். சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருப்பதாக குறிப்பிட்டவர், பாஜக ஆளும் மாநிலங்களில் நேர்மையாக பணிகள் நடக்கிறது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றார். நேர்மையின் அடையாளமாக திகழும் அரவிந்த் கெஜ்ரிவாரின் பெயரை களங்கப்படுத்த சதி நடப்பதாகவும், 24 மணி நேரங்களில் கெஜ்ரிவாலும் சிறையில் இருந்து வெளியே வருவார் எனவும் தெரிவித்தார்.

BREAKING || 5 மணி நிலவரத்தில் எந்தெந்த மாவட்டம் டாப்? - சென்னையில் பதிவான ஓட்டுதான் மெகா சர்ப்ரைஸ்

TN Election 2026 | Kovai | அடியோடு மாறிய கணக்கு.. கோவை நிலவரம்..? களத்தில் இருந்து சுடசுட தகவல்

Breaking | TN Election 2026 | நிறைவடைந்தது தமிழக தேர்தல் | மூடப்பட்ட கேட்.. | பரபரக்கும் அதிகாரிகள்

TN Election 2026 | SIR எபெக்ட்?... | 5 மணிக்கே கிளியராக தெரிந்த மாற்றம்

TN Election 2026 | இத்தனை கோடி Voteஆ..!? இதுவரை தமிழ்நாடு காணாத தேர்தல்