கடந்த 3 ஆம் தேதி, அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் சென்ற போது விமானம் மாயமானது. லிபோ பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது, உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஏ.என். 32 விமானத்திற்கு சொந்தமானது என இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.